நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார அமைச்சு

டெல்டா திரிபுடனான கொவிட் 19 பரவலை தடுக்க வேண்டிய பொறுப்பு மக்களிடத்திலேயே உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் தாக்கம் வீரியமடைந்துள்ளதன் காரணமாக தொற்றானது வேகமாக பரவக்கூடும்.

எனவே அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இல்லையெனில், மீண்டும் டெல்டா திரிபுடனான கொத்தணிகள் உருவாகக்கூடும் என விசேட வைத்தியர் சுசி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.