மைத்திரி செய்த உதவியால் நிலவில் கால் பதிக்க போகும் இளம் யுவதி

Dear moon திட்டத்தின் கீழ் நாசா நிறுவனம் ஊடாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ள குழுவினரில் இடம்பிடித்துள்ள இலங்கை இளம் யுவதி சந்தலி சமரசிங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

2019ஆம் ஆண்டு நாசா நிறுவனத்தில் விசேட பயிற்சி பெறுவதற்கு புலமைப் பரிசில் பெற்ற சந்தலி தனது பொருளாதார நெருக்கடி தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உதவி கோரியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த யவதிக்கு தேவையான பண உதவிகளை செய்து கொடுத்தார்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நிலவுக்கு செல்ல வேண்டிய தெரிவு செய்யப்பட்ட 17 பேர் கொண்ட குழுவில் இலங்கையைச் சேர்ந்த 20 வயதான சந்தலியும் இடம்பிடித்துள்ளார்.

தனக்கு உதவி புரிந்த முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து குறித்த யுவதி ஆசி பெற்றதோடு தான் நிலவுக்கு செல்ல உள்ள செய்தியையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

20 வயதான இலங்கை யுவதி ஒருவர் நிலவில் காலடி வைக்கப் போகிறார் என்பது உலக அளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.

இந்த திட்டத்திற்காக 249 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் விண்ணப்பங்களில் 17 பேரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 8 பேருக்கு இந்த சிறப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.