பசில் ராஜபக்ஷ தொடர்பாக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நேற்று காலை பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜயன்த கெடகொட விலகியதை தொடர்ந்து வெற்றிடமாகி உள்ள பாராளுமன்ற ஆசனத்திற்காக பசில் ராஜபக்ஷவை பெயரிடுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வுக்கு மிகவும் பொறுப்புவாய்ந்த அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *