பசில் ராஜபக்ஷ நிதியமைச்சரானார் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த புதிய அமைச்சு

பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இவ்வாறு பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் இந்த தகவலை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளதுடன்,  அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *