பெண் வைத்தியர் ஆடை மாற்றுவதை படம் பிடித்த ஆண் வைத்தியர்

பெண் மருத்துவர் ஒருவர் தனது தங்கும் விடுதியில் ஆடைமாற்றும் போது புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் வைத்தியரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் மருத்துவர், இரவு 8.45 மணியளவில் தனது தங்கும் விடுதியில் ஆடை மாற்றிக் கொண்டிருந்தபோது புகைப்படங்களை எடுத்ததாகக் கூறப்படும் வைத்தியர், பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புத்திக ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பின்னர் இதுபோன்ற மேலும் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் குறித்த வைத்தியருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

எமது செய்திகளை Whats App மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு இந்த Whats App குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *