பெற்ற மகனை அடித்தே கொன்ற பெற்றோர் – கைக்குழந்தையுடன் அநாதாரவான மனைவி

தாம் பெற்ற மகனையே பெற்றோர் அடித்து கொன்ற பரிதாப சம்பவமொன்று இலங்கையில் ஹசலக என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஹசலக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஜூலை 6 ஆம் திகதி நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். பலியானவர், ஹசலகாவில் வசிக்கும் 27 வயதான சுனில் நிசங்க என்ற, 3 வயது மற்றும் 2 வார வயதுடைய இரண்டு மகள்களின் தந்தை ஆவார்.

அவர் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தனது பெற்றோரின் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு சிறிய அறையில் வசித்து வந்தார், மேலும் கூலி வேலை செய்வதன் மூலம் தனது குடும்பத்தை பார்த்து வந்தார்.

குடும்ப தகராறு அதிகரித்ததால் தந்தையும் அவரது சகோதரி உட்பட மைத்துனரும் தனது கணவரை தடிகளாலும் கைகளாலும் அடித்ததாக அவரது மனைவி பொலிசாரிடம் தெரிவித்தார்.

படுகாயமடைந்து விழுந்த கணவர் தன்னிடம் தண்ணீர் வழங்குமாறு கேட்டதாகவும், அதனை குடிக்க முடியாமல் விழுந்ததாகவும் மனைவி கூறியுள்ளார்.

இதேவேளை சடலத்தை வீட்டில் வைக்காமல், ஹசலக பொது மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதால் பிரதேசவாசிகள் அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு ஆதரவாகவே இந்த எதிர்ப்பு இடம்பெற்றுள்ளது.

கணவனின் உயிரிழப்பால் 02 வார குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளுடன் தாய் அநாதரவாகியுள்ளதாகவும், தாயுடைய உறவினர்கள் எஎவரும் இல்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

இறந்தவரின் தாய், தந்தை, சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோரை ஹசலகா பொலிசார் கைது செய்து ஜூலை 9 ம் திகதி மஹியங்கன மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபர்கள் ஜூலை 19 வரை விளக்க மறியலில் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *