பொதுப் போக்குவரத்து எப்போது முழுமையாக ஆரம்பமாகும் – வௌியான புதிய அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியுடன் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், அல்லது நீடிக்கப்பட்டாலும், பொதுப் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு கொவிட்-19 செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமாயின் வழமையான முறையில் பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இடம்பெறும்.

அதேநேரம் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமாயின் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்து முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயணக்கட்டுப்பாடுகள் உள்ள போது அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.