மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைக்கு மீண்டும் தடை

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகளை மீண்டும் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை (17) முதல் ஆகஸ்ட் 1ஆம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.