ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு இலட்சம் ரூபா அபராதம்

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நாட்டில் சில வகை பொலித்தீன் மற்றும் லன்ச்ஷீட் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உக்காத (Lunch Sheets) லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்தவதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படவுள்ள நிலையில், அதனை மீறுபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத லன்ச்ஷீட்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12 தொடக்கம் 15 மில்லியன் Lunch Sheets நாளாந்தம் இலங்கையில் பயன்படுத்தப்படுவதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.