பொலிஸார் போல வேடமிட்டு சிக்கிய மூன்று பேர்

பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் வத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் மற்றும் வத்தளை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிய அடையாள அட்டையைக் காண்பித்து, பொதுமக்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அவர்கள் கொள்ளையிட்டு வந்துள்ளனர்.

குறித்த நபர்கள் 17 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *