பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடனடி இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அத்தியட்சகர்கள் 7 பேரும், சிரேஷ்ட பொலிஸ் மா அத்தியட்சகர் ஒருவரும் இவ்வாறு சேவைகளின் தன்மைக்கேற்ப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நந்தன முனசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பதிநாயக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தர்மரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜயலத், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கொடிதுவக்கு, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தமிந்த மற்றும் பொலிஸ் அதிகாரி விஜயசேன ஆகிய 8 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நந்த முனசிங்க நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றவியல் மற்றும் வாகன பிரிவிற்குப் பொறுப்பாகச் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.எஸ். பத்திநாயக்க பிரஜைக் காவல்துறை மற்றும் சுற்றாடல் பிரிவுக்கும், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.எம்.தர்மரத்ன மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாகவும், வடமத்திய மாகாணத்துக்கான பதில் பொறுப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் டபிள்யு.கே.ஜயலத் வடமாகாணத்துக்குப் பொறுப்பாக மாற்றப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்துக்குப் பொறுப்பாகவும், ஊவா மாகாணத்துக்கான பதில் பொறுப்பதிகாரியாகவும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ஆர்.எல்.கொடிதுவக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாணத்துக்குப் பொறுப்பாகச் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.டீ.ஆர்.எம். தமிந்த மாற்றப்பட்டுள்ளதுடன், பிரதி காவல்துறைமா அதிபர் என்.எல். விஜேசேன, அனுராதபுர மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *