பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறிய விடயம்

பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவு மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு ஆகியவை இணையக் குற்றங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்காணிக்கின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

“சிறுவர் துஷ்பிரயோகம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஊடகங்களின் சமூக பாதிப்பு” என்ற தலைப்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யூ டியூப் மற்றும் சமூக ஊடகங்களில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் பிற சைபர் குற்றங்கள் குறித்து பொலிஸ் கணினி குற்றப்பிரிவு மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இணையத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க சட்ட அமுலாக்கம் மட்டும் போதாது என்றும் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“இந்தியா மற்றும் தெற்காசியாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது, நாங்கள் நிலைமையைக் குறைக்க முயற்சிக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற மேலும் பல முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை அறிந்துகொள்ள விருப்பமானவர்கள் எமது Whats App குழுவில் இணைந்து கொள்ளலாம்.