ஒன்றாக சேர்நது மதுஅருந்திய இருவருக்கு போதையில் நடந்த விபரீதம்

மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் இரண்டு நபர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எஹலியகொடை பத்பேரிய பிரதேசத்தில் நேற்று (04) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் குறித்த இருவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் ஒருவர் பொல்லு ஒன்றால் மற்றைய நபரை தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, தாக்கிய நபர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் 45 வயதுடையவர் எனவும், தற்கொலை செய்துக் கொண்ட நபர் 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *