பணம் பெற்று மனைவியை விற்ற நபர் வெள்ளவத்தையில் கைது

உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண் ஒருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ய முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.

கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபர் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அளித்த முறைப்பாட்டிற்கமைய தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் இதற்கு முன்னரும் 36 வயது வெளிநாட்டுப் பெண் ஒருவரை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தொழில் வழங்குவதாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு குறித்த பெண் அழைத்து வரப்பட்டுள்ளார். அதன் பின்னர் பாலியல் நடவடிக்கைக்காக அவர் விற்பனை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

எனினும் தற்போது பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்யப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டு யுவதி கைது செய்யப்பட்டவரது மனைவி என்றும் கூறப்படுகின்றது.

உஸ்பெகிஸ்தான் பெண் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.