மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய தேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக இவ்வாறு பொதுப் போக்குவர்த்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவைகளும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

மாகாணங்களுக்ககு இடையிலான அலுவலக புகையிரத சேவைகளையும் இதன்போது ஆரம்பிக்க உள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்ட பயணத்தடை கடந்த 10ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *