பசில் ராஜபக்ஷவின் பதவியேற்பு தொடர்பில் வௌியான புதிய தகவல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 08ம் திகதி பாராளுமன்ற உறிப்பினராக பதவியேற்க உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று காலை பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜயன்த கெடகொட விலகியதை தொடர்ந்து வெற்றிடமாகி உள்ள பாராளுமன்ற ஆசனத்திற்காக பசில் ராஜபக்ஷவை பெயரிடுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

குறித்த கோரிக்கைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எதிர்வரும் 8 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வுக்கு மிகவும் பொறுப்புவாய்ந்த அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும், அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ மேற்கொள்வார் என்று சாகர காரியவசம் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *