மேலும் இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

சற்றுமுன்னர் மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சசீந்திர ராஜபக்ஷ மற்றும் மொஹான் டி சில்வா ஆகிய இருவரும் இன்று மாலை தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர்.

இதன்படி, சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *