யானையின் தாக்குதலில் சிறுவன் பலி – யானையை கைது செய்த பொலிஸார்

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் சிறுவன் ஒருவனை மிதித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் இரண்டு யானைகளை காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வளர்ப்பு யானை ஒன்று தாக்கியதாலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த முறைப்பாடுக்கமைய, சிறுவனை தாக்கி கொலை செய்த யானையின் உரிமையாளரை கைதுசெய்த காவல்துறையினர் சிறுவனை மிதித்து கொலை செய்த காட்டு யானையையும் அதன் குட்டியையும் போலீசார் சிறைப்பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அந்தப் பெண் யானையும் அதன் குட்டியும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து போக்காகட் காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டன.

சிறுவனை தாக்கிய யானைகளுக்கும் அதன் உரிமையாளருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இரண்டு யானைகளும் வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.