சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம் நடந்தது இதுதானாம்

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்ககளில் வெளியாகியுள்ள படங்களை அடிப்படையாக வைத்து ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் எனவும் இதில் எதனையும் மறைக்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒன்றாக இரவு உணவருந்துவதை இந்த படங்கள் காண்பித்துள்ளன.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில உள்ள ரணில்விக்கிரமசிங்கவின் அயலவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனவும், குறிப்பாக பிரதமரின் கீழ் வரும் நிறுவனங்கள் தொடர்பில் பேசப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *