ரிசாத்தின் மனைவி உட்பட நான்கு பேருக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (23) பிற்பகல் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று (24) கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.