85 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து- இதுவரை 15 பேர் மீட்பு

தெற்கு பிலிப்பைன்ஸின் சுலு மாகாணத்தில் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ விமானம் விபத்து க்கு உள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 85 பேர் இருந்தனர்.

அதில் 15 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்நாட்டின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 04) ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக ஆயுதப்படைத் தலைவர் சோபேஜானா (Sobejana) தெரிவித்துள்ளார்.

இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் விமானத்தில் மீதமுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காக இப்பகுதியில் ஏற்கனவே தேடல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

“மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் விமானம் விபத்து நடைபெற்ற இடத்தில் உள்ளனர்,

மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்று நம்புகிறோம்” என்று சோபேஜானா கூறினார்.

சி -130 விமானம், தெற்கு பிலிப்பைன்ஸின் சுலு மாகாணத்தில் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதாக ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜானா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *