விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமியின் தாயும் கர்ப்பம்

15 வயதான சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அச்சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அத்தாய் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் மேலதிக நீதவான் லோஹினி அபேவிக்ரம விடுவித்தார்.

இந்நிலையில், அந்த சிறுமியின் தாய் மூன்று மாத கர்ப்பிணி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 15 வயதான சிறுமி ஒருவர், இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் லெப்டினன்ட் கொமாண்டர் இந்திக திமுத்து டி சில்வா பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வைத்திய நிபுணர் கடற்படை வைத்திய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அரிவித்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவுக்கமைய, குறித்த வைத்தியர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கூறினார்.

வெலிசறை கடற்படை வைத்தியசாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, இரத்மலானை மற்றும் கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் 41 வயதான குறித்த வைத்தியர், கைது செய்யபப்டும்போது வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியராகவே பதவி வகித்து வந்தார்.

இந் நிலையிலேயே அவர் நேற்று (06) கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம உத்தரவிட்டார். இவ்வாறான நிலையில் குறித்த வைத்தியரை பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ள கடற்படை அவருக்கு எதிராக கடற்படை விசாரணைகளையும் ஆரம்பிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *