09 பிக்குகளுக்கு கொரோனா தொற்று; விகரைக்கு பூட்டு

அம்பகமுவ பொது சுகாதார காரியாலயத்திற்கு உட்பட்ட கினிகத்தேனை பதுபொல ஸ்ரீ சுதர்சனாராமய விகாரையின் பிரிவெனாவில் 09 பிக்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விகாரையிலுள்ள பௌத்த பிக்குகளுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் போதே 09 பிக்குகளுக்கு தொற்று இருப்பது இன்று (04) உறுதியானதாக அம்பகமுவ பொதுசுகாதார பிரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த விகாரை மூடப்பட்டுள்ளதுடன் விகாரையிலுள்ள பிக்குகளுக்கு தான நடவடிக்கைகளுக்கான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேசசபை தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *