15 வயது சிறுமி விவகாரம் – முன்னாள் அமைச்சர் கைது

கல்கிஸை பகுதியிலிருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் சிறுமியொருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், மாலைத்தீவின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

முன்னாள் மாலைத்தீவு மாநில நிதி அமைச்சரும், டிராகுவின் முன்னாள் தலைவருமான முகமது அஷ்மாலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

45 வயதுடைய முகமது அஷ்மாலி என்பவர் கைது செய்யப்பட்டதை இங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் – https://en.sun.mv/67601

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *