Pfizer தடுப்பூசி செலுத்துவது திடீரென இடைநிறுத்தம் – இராணுவத்தளபதி அறிவிப்பு

கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாகாக ஃபைஸர் தடுப்பூசியை ஏற்றும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசி கிடைக்கவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் மூன்றாம் வாரமளவில் குறித்த தடுப்பூசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *