அரிசி விலை மேலும் அதிகரிப்பு – தற்போதைய விலை நிலவரம்

அரிசி விலை நிலவரம்- 2021 Today breaking news in Tamil

பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை, மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

அதன்படி, கீரி சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும், சம்பா நாட்டு அரிசி கிலோ 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம்சம்பா அரிசி 155 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

இதேவேளை சந்தையில் சீனியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சீனிக்கு கட்டுப்பாடு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் அது கடைபிடிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *