ஆசிரியர்கள், அதிபர்களுக்கு விஷேட அறிவிப்பை வௌியிட்ட கல்வி அமைச்சு

ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் - Today breaking news in Tamil

200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு பாதுகாப்புப் பிரிவினரினால் எந்தத் தடையும் ஏற்படமாட்டாது.

ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்ளுவது போதுமானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாடளாவிய ரீதியில் 200 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று (21) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் ஆசிரியர்கள் – அதிபர் சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, இன்றைய தினம் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சில பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமுகமளித்திருந்ததோடு, கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தங்களது தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதேவேளை நாளைய தினமும் தொழிற்சங்க போராட்டம் நடவடிக்கை, முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் – அதிபர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, தாம் கண்காணிப்புக்குச் சென்ற சில பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் பொறுப்புடன் கடமைக்கு சமுகமளித்திருந்தாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தாம் முன்னதாக கூறியதுபோல நாடுமுழுவதும் பயிலுநர் பட்டதாரிகள், ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு சமுகமளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *