இத்தாலியை அதிரச் செய்த சம்பவம் – இலங்கைப் பெண்ணும் சடலமாக மீட்பு

இத்தாலியில் தேடப்பட்ட பெண் சடலமாக மீட்பு - News in Tamil

இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்த நிலையில், ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்நாட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் நேற்று முதல் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், Adige என்ற ஆற்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 34 வயதான சசித்ரா நிசன்சல பெர்னான்டோ என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11, 3 வயதுகளுடைய இரண்டு பெண் குழந்தைகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளின் சடலம் வீட்டின் படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலங்கள் கிடந்த அறையில் கொலைக் குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் எதுவும் காணப்படவில்லை.

குழந்தைகளது சடலங்கள் மீட்கப்பட்ட பின்னர் தாயாரைத் தேடும் முயற்சியில் பொலிஸார் தீவரமாக ஈடுபட்டிருந்தனர். பல மணி நேரங்கள் நீடித்த தேடுதலுக்குப் பிறகு தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர் தனது சாபதி(11 வயது) மற்றும் சாந்தினி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியின் வெரோனா நகரில் வசித்து வந்துள்ளார்.

குறித்த பெண், நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

இரண்டு குழந்தைகளும் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தனது இலங்கைக் கணவருடன் இத்தாலி நோக்கிச் சென்றிருந்த வேளையில் குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து, தனது இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *