நாட்டில் இனி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதா? அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

எரிபொருள் தட்டுப்பாடு இனி இல்லை - Today news in Tamil

அடுத்த வருட ஆரம்ப பகுதியில் இருந்து 8 மாதங்களுக்குத் தேவையான டீசல் மற்றும் பெட்ரோலை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு தேவையான கொள்முதல் நடவடிக்கைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என நாட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் நிலவுவதாகவும், தற்போது நாட்டில் அவ்வாறான எரிபொருள் தட்டுப்பாடொன்று இல்லை எனவும், எதிர்காலத்தில் அவ்வாறானதொரு தட்டுப்பாடு ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் Vichol Asia Pvt. Ltd இன் கொள்முதல் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், திறந்த சந்தைப் பொருளாதார முறையொன்று செயற்படும் நாட்டில், வழங்கல் மற்றும் தேவைக்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அண்மைக் காலங்களில், இலங்கையின் பொருளாதாரத்தில், விநியோகம் தொடர்பாக சில தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக உற்பத்தி சரிவு, விநியோக சீர்குலைவுகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு போன்ற அனைத்து காரணிகளாலும் இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, திறந்த சந்தையில் நியாயமான போட்டி அதிகரிப்பு பொருட்களின் விலைகளை குறைக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கத்தினால் இதுவரையிலும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டுப் பரிமாற்றங்கள் மற்றும் ஏற்றுமதி வருவாய் படிப்படியாக மீண்டு உயர்வடைவதால் எதிர்வரும் சில மாதங்களினுள் சிறந்ததொரு பொருளாதார சூழ்நிலை உருவாகக்கூடும்.

தற்போதைய அரசாங்கம் ,ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்ததை விட சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை சுமார் 84 டொலர்கள். அதனால் விலையை அதிகரிக்க இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்நாட்டு மக்களின் நலன்கருதி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனவும், இந்த நட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு மக்களுக்கு எரிபொருளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தகவல் – அரச தகவல் திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *