விரைவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அதிரடித் தகவல் வௌியானது

எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் | Today breaking news in Tamil

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் டொலர் இன்மையால் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கனிய எண்ணெய் பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார்.

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமானது கையிருப்பில் உள்ள நிதியைக் கொண்டு நாளாந்தம் எரிபொருளைக் கொள்வனவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

எனவே, சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கனிய எண்ணெய் பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *