எரிபொருள் பிரச்சினையா? பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

எரிபொருள் பிரச்சினையா? முக்கிய அறிவிப்பு - news in Tamil

எரிபொருள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் அது குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 011 54 55 130 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க முடியும்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மை, பதுக்கி வைத்தல் என்பன தொடர்பிலும் தகவல்களை வழங்க முடியும் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் நோக்கில் கடந்த நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *