சந்தையில் மீண்டும் அரிசி மற்றும் சீனி விலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை

சந்தையில் மீண்டும் அரிசி மற்றும் சீனி விலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை

சந்தையில் சீனி மற்றும் அரிசி என்பவற்றின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பதிவாகியுள்ளன. சீனிக்காகக் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் இவ்வாறு விலை அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் சீனி தொகை பதுக்கப்பட்டிருந்தமையினால் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 230 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது குறித்த சீனி தொகை மீட்கப்பட்டதோடு அரசாங்கத்தினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 122 ரூபா எனக் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 135 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன், சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபா எனக் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட போதிலும், அது சந்தையில் 138 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாட்டு அரிசி ஒரு கிலோகிராம் 125 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 150 ரூபாவுக்கும், கீரி சம்பா ஒரு கிலோகிராம் 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான விசேட சுற்றிவளைப்புகள் நுகர்வோர் அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *