தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – தற்போதைய விலை நிலவரம்

தங்கம் விலை என்ன நிலவரம்? Today breaking news in Tamil

தங்கம் விலை என்ன நிலவரம் என்று பார்த்தால், இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது சரிவினைக் கண்டிருந்தாலும், தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வருகின்றது.

மேலும் இன்றைய செய்திகள்

நீண்ட கால நோக்கில் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1800 டாலர்களாக உள்ள நிலையில், அடுத்த டார்கெட் 3,000 டாலர்களாக உள்ளது.

இது நீண்டகால நோக்கில் 5000 டாலர்களாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை அல்லது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன நிலவரம் என்று பார்த்தால் கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்பட்டது.

இது கடந்த திங்கட்கிழமையன்று 1767.50 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 1760.30 டாலர்களாக தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும்.

இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1815.50 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் முடிவில் 1793.35 டாலர்களாக முடிவடைந்தது. இது ஒரு வாரத்தில் 25 டாலர்களுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *