தமிழ் செய்திகள் இன்று – Breaking News in Tamil Today

தமிழ் செய்திகள் இன்று - Breaking News in Tamil Today

தமிழ் செய்திகள் இன்று tamil news paper for today breaking news in Tamil Today breaking News Tamil tamil news in online tamil news on live

தமிழ் செய்திகள் இன்று tamil news paper for today breaking news in Tamil Today breaking News Tamil tamil news in online tamil news on live

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. குருநாகல் மாகாண பொது மருத்துவமனையில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நோயாளர் விடுதித் தொகுதியை முழுமையாக நிர்மாணித்தல்

குருநாகல் மாகாண பொது மருத்துவமனையானது 2,355 கட்டில்களையும், 57 நோயாளர் விடுதிகளையும், 28 விசேட அலகுகளையும் கொண்டமைந்துள்ள மருத்துவமனையாகும். குறித்த மருத்துவமனையின் அபிவிருத்தித் திட்டத்திற்கமைய

2007-2009 காலப்பகுதியில் புதிய நோயாளர் விடுதிகளை அமைப்பதற்கான ஐந்துமாடிக் கட்டிடமொன்றை கட்டம் கட்டமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், குறித்த கட்டுமானங்களில் இரண்டு மாடிகள் மாத்திரமே இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

காலஞ்சென்ற ஐயிலின் டி மெல் பெண்மணியின் இறுதி விருப்பு ஆவணத்தின் பிரகாரம் குருநாகல் மருத்துவமனைக்கு நோயாளர் விடுதியொன்றையோ அல்லது கட்டிடமொன்றின் பகுதியையோ நிர்மாணிப்பதற்கான உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,

தமிழ் செய்திகள் இன்று tamil news paper for today breaking news in Tamil Today breaking News Tamil news Sri Lanka Today in online tamil news on live

குறித்த பெண்மணியின் சொத்துக்களின் பொறுப்புதாரர்கள் இவ் ஐந்து மாடிக் கட்டிடத்தின் நிர்மாணத்தைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

குறித்த உடன்பாட்டின் பிரகாரம் அத்திட்டத்தை 02 வருடங்களில் நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்வதற்காக ஐயிலின் பெண்மணியின் சொத்துக்களின் பொறுப்புதாரர்களாக நியமிக்கப்பட்டுள்ள தரப்பினருடன் உடன்பாட்டு

ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. மாத்தறை மாவட்டத்தில் வெலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் கைத்தொழில் வலயமொன்றை அமைத்தல்

பிரதேச செயலக மட்டத்தில் உற்பத்தி ஊக்குவிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சு பிரதேச கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தென் மாகாணத்தில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இணையாக மாத்தறை மாவட்டத்திலுள்ள தொழிற்துறைகளை இலக்காகக் கொண்டு

புதிய அபிவிருத்தி வலயமொன்றை வெலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் சாலிமவுன்ட் தோட்டம்ஃஹல்லல தோட்டத்தை மையமாகக் கொண்ட 200 ஏக்கர் காணியின் ஒரு பகுதியில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த முன்மொழிவைக் கருத்தில் கொண்டு குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொள்கை ரீதியாக அங்கீகாரத்தை வழங்குவதற்கும்,

குறித்த வேலைத்திட்டத்திற்கும் அப்பிரதேசங்களில் அபிவிருத்திக்காக அடையாளங் காணப்பட்டுள்ள முன்னுரிமைக் கருத்திட்டங்களுக்குத் தேவையான காணித் துண்டுகளை,

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான பெருந்தோட்டத்தில் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள வகையில் பயிரிடப்படாத பகுதிகளிலிருந்து ஒதுக்கிக் கொள்வதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. மஹமோதர மகப்பேற்று மருத்துவமனையை மீள்நிர்மாணித்தல்

மஹமோதர மகப்பேற்று மருத்துவமனையின் கருத்திட்ட நிதியிடலுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜேர்மன் முகுறு வங்கிக்கும் இடையில் 28 மில்லியன் யூரோக்களுக்கான கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன்,

tamil news paper for today breaking news in Tamil Today breaking News Tamil tamil news in online tamil news on live

பின்னர், குறித்த கருத்திட்டத்திற்காக மேலதிக மிகைநிரப்புத் தொகையாக 13 மில்லியன் யூரோக்களைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த வங்கியுடன் மேலதிகக் கடன் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள் இன்று tamil news paper for today breaking news in Tamil Today breaking News Tamil tamil news in online tamil news on live

குறித்த கருத்திட்ட நடவடிக்கைகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்வதற்கு இயலுமான வகையிலும், பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள மிகைநிரப்புத் தொகையான

13 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக மாற்றிக் கொள்வதற்கும் ஜேர்மன் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த நன்கொடை ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

இலங்கை துறைமுக அதிகார சபையின் தேசிய துறைமுகங்கள் பிரதான திட்டங்கள் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கான சேவை வழங்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை அபிவிருத்தி செய்வதற்கான அவசர தேவைகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, புளூமென்டல் பிரதேசத்தில் துறைமுகத்திற்கு அவசியமான சேவை வழங்கல் பிரிவொன்றை நடாத்திச் செல்வதற்கு துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது

தற்போது புளூமென்டல் பிரதேசத்தில் அமைந்துள்ள துறைமுக அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இல்லத்தை பொருத்தமான இடத்தில் அமைக்க வேண்டிய தேவையுள்ளது.

இறாகம மஹர பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான 08 ஹெக்ரயார்களுடன் கூடிய காணியின் ஒருபகுதி கொழும்பு துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதியில் கருங்கல் விநியோகிக்கும் தொழிலிடமாக பேணப்பட்டு வந்துள்ளதுடன்,

தற்போது இக்காணி எந்தவொரு வகையிலும் பயனுள்ள செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படாமலும் உள்ளது.

அதேபோல், குறித்த காணியில் தற்போது மழைநீர் நிரம்பிக் காணப்படுவதால், அந்நீர் நகர அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த காணித்துண்டை கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமாக வதிவிட, நகர, கலாச்சார, நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள் இன்று குறித்த முன்மொழிவுக் கருத்திட்டத்தை அரச தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *