நடுவீதியில் தாக்குதல் நடத்திய பொலிஸ் DIG இற்கு ஏற்பட்ட நிலை

தாக்குதல் நடத்திய பொலிஸ் DIG இற்கு ஏற்பட்ட நிலை

இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில் இன்று (26) காலை காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட பொலிஸ் சிரேஷ்ட அதிகாரியொருவருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

சப்ரகமுவ பகுதியில் கடமையாற்றும் குறித்த காவல்துறை உயரதிகாரி தொடர்பான விசாரணைகள் காவல்துறை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அண்மையில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பதவி உயர்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *