அதிரடித் தீர்மானம் எடுக்கத் தயாராகும் நீதியமைச்சர் அலி சப்ரி?

நீதி அமைச்சர் விடுத்த எச்சரிக்கை - Today breaking news in Tamil

ஜனாதிபதி ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

செயலணியை உருவாக்குவது குறித்து என்னுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை, எனக்கு இது குறித்து மகிழ்ச்சியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஞானசார தேரர் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடித்தால் தன்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என நீதியமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாக கூறி உள்ளதாக தேஷய பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை செயலணியில் இடம்பெற்றுள்ள முஸ்லீம் உறுப்பினர்கள் எவருக்கும் அந்த செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என்பது தெரியாது என தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை குறிப்பிட்ட செயலணிக்கு நியமித்திருப்பது குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கலீல் ரஹ்மான் ஊடகங்கள் மூலமாகவே அது தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவர் அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும் என அவரது கட்சி தலைமை தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *