பெற்றோர்களிடம் மருத்துவர் சங்கம் விஷேட கோரிக்கை

மருத்துவர்கள் சங்கம் விஷேட கோரிக்கை; breaking news in Tamil

அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியை, தங்களது பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு தயங்க வேண்டாம் என இலங்கை மருத்துவர்கள் சங்கம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் தலைவர், விசேட வைத்தியர் பத்மா குணரத்ன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில், பெருமளவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் சாதக மற்றும் பாதுகாப்புத் தன்மை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதன் பின்னரே இலங்கை அந்த தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றது.

இந்நிலையில், பெற்றோர்கள் என்ற அடிப்படையில், பிள்ளைகளை தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படுத்த முன்வர வேண்டும் என இலங்கை மருத்துவர்கள் சங்கம் இன் தலைவர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *