டிசம்பர் மாதத்தின் பின் 12 மணி நேர மின்வெட்டு?

மின் வெட்டு அமுலாகும்? Today breaking news in Tamil Ceylon Nation

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் நாட்டில் 12 மணிநேர மின் வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க (Champika Ranavakka) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த கச்சா சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் ,நிலக்கரி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில், நிலக்கரியை இறக்குமதி செய்யாவிடின் மின்சார உற்பத்தியில் 45 சதவீதம் பாதிக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *