அரசாங்கத்தை கவலையடையச் செய்துள்ள விடயம் – போட்டுடைத்த அமைச்சரவை பேச்சாளர்

விலை உயர்வு; அரசாங்கம் கவலையில் - breaking news in Tamil

சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான விலை உயர்வு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தாம் கவலை அடைவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பருப்பு, சீனி, அரிசி, பால்மா ஆகியனவற்றிற்கு மேலதிகமாக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

பூசணி மற்றும் வெள்ளரிக்காய் தவிர்ந்த ஏனைய அனைத்து மரக்கறிகளும் கிலோவொன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பொருளாதார மத்திய நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய வெங்காயம் கிலோவொன்று 120 ரூபா வரையில் விலை உயர்வு அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தாம் கவலை அடைவதாக தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் வர்த்தக பொருட்கள் மற்றும் சில மருந்து வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், இலங்கையில் பயன்படுத்தும் எரிபொருள், பால்மா உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனவே, இலங்கையினால் வெளிநாடுகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை மாத்திரமின்றி அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் எதிர்வரும் சில மாதங்களில் குறித்த பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *