வீட்டில் படுத்துக்கொண்டே 25 இலட்சம் ரூபா சம்பாதிக்கலாம் – நிறுவனம் ஒன்றின் அதிரடி அறிவிப்பு

Earn money in sleep - Today breaking news in Tamil | இன்றைய செய்தி

படுக்கையில் படுத்து கொண்டே ( earn money in sleep) வருட சம்பளமாக ரூ.25 லட்சம் ருபாய் பெறலாம் என்று இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. Ceylon Nation

இங்கிலாந்தில் crafted beds என்ற நிறுவனம் உயர்ந்த ரக படுக்கைகளை தரமாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இருப்பினும் வாடிக்கையாளர்ககளை எந்த விதத்திலும் கஷ்டபடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். இந்நிலையில் அந்நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதால் அவர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதாவது படுக்கை ஆய்வாளர் பணிக்கு தேர்வாகும் நபர் அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் படுக்கையில் இருக்கும் சவுகரியம் குறித்து தகவல் கொடுக்க வேண்டும்.

வாரந்தோறும் அவர்கள் வீட்டிற்கு ஒரு படுக்கை அனுப்பி வைக்கப்படும். பெட்டில் படுத்து கொண்டு நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கலாம்.

இதற்கு செலவாகின்ற பணத்தை அந்நிறுவனமே எற்கிறது. earn money in sleep – அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு வருட சம்பளமாக 25 லட்ச ரூபாய் அறிவித்துள்ளது (£24,000).

இது குறித்து நிறுவனத்தின் மேலாளர் பிரையன் தில்லான் கூறுகையில், வாடிக்கையாளர் திருப்தியே எங்களுக்கு முக்கியம். மேலும் இந்த பணிக்கு தேர்வாகும் நபர் வாரம் ஒரு முறை தனது அனுபவத்தை ரிவ்யூ செய்து நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இங்கிலாந்தை சேர்ந்த நபர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *