இறக்குமதி அரிசிக்கான விலை குறைகிறது

அரிசி வரி குறைகிறது - Today breaking news in Tamil | Ceylon nation

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு, இதுவரை விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட தீர்வை வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட பண்ட தீர்வை வரி, 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு இவ்வாறு நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *