ஆசிரியரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்ற மாணவர்கள்

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் - Today breaking news in Tamil

போத்தல – காசிதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதுடைய சிறுமியும், சிறுவனொருவனும் நேற்று (21) இரவு ஆசிரியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போத்தல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் கடமையாற்றும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காயங்களுடன் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த ஆசிரியர், மேற்படி சிறுமியின் தாயாருடன் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பினை பேணிவந்துள்ளதாகவும், இது தொடர்பில் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று வினவியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த சிறுமி ஆசிரியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் போத்தல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.