முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு (ஆட்டோ சாரதி) கட்டாயமாகும் சட்டம்

ஆட்டோ சாரதி கட்டாயம் செய்ய வேண்டியது - News in Tamil

முச்சக்கர வண்டிகளில் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டியது கட்டாயமாக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் கட்டாயமாக மீட்டர்கள் பொருத்தியிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதிக்கு முன்னதாக நாடு முழுவதிலும் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் கட்டமாக மேல் மாகாணத்திலும் பின்னர் தென் மாகாணத்திலும் அதன் பின்னர் ஏனைய மாகாணங்களிலும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துமாறு நீண்ட காலமாக பல்வேறு அரசாங்கங்களிடம் கோரி வருவதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.