05 கோடி ரூபா பெறுமதியான மாணிக்க கல்லை காணவில்லை

இரத்தினக்கல் காணாமல் போனது - Today breaking news in Tamil

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மாணிக்கக்கல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கதிர்காமம் ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட 38 பவுண் தங்க தட்டு காணாமல் போனமை தொடர்பில் அங்கொட லொக்காவின் மனைவியிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (08) வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அங்கொட லொக்காவின் மகனின் தோஷத்தை போக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கதிர்காமம் ஆலயத்திற்கு குறித்த தங்க தட்டு காணிக்கையாகச் செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.