மின்சார சபை ஊழியர்களின் அதிரடித் தீர்மானம்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அறிவிப்பு News in Tamil

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று (25) நண்பகல் 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டப்படி வேலை பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேராட்டம் நடைபெறும் என்றும் இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் காலை 08:30 முதல் மாலை 4:15 மணி வரை மட்டுமே பணிக்கு வருவார்கள் என்றும் அந்த சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மின் துண்டிப்பு மற்றும் அவசர நடவடிக்கையின்போது, வேலை நேரத்துக்கு மேலதிகமாக கடமைக்கு வருவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிராகவும், மின்சார சபையில் நிலவும் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழ் செய்திகள் இன்று – Sri Lanka Tamil News Today