நாடு மீண்டும் முடக்கப்படுமா? அரசாங்கத்தின் அறிவிப்பு

உபுல் ரோஹன கூறிய விடயம் - Today breaking news in Tamil

பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது சுகாதார பணியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,

கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் என்றும் உபுல் ரோஹன கூறினார்.

நாட்​டை மீண்டும் முழுமையாக முடக்கப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு, நாட்டை முடக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்ரவை இணைப்பேச்சாளர் ரொமேஷ் பத்திரண கூறினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்,

புதிய வைரஸ் பரவிக்கொண்டு வருகின்ற நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்ரவை இணைப்பேச்சாளர் ரொமேஷ் பத்திரண

“வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பதற்காக, சுகாதார வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டை முடக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.