எச்சரிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்

எச்சரிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள் - Today news in Tamil

கேகாலை, குருநாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதுளை, கம்பஹா, கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தற்போதுள்ள வானிலை சில நாள்களுக்கு நீடிக்கும் எனவும் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

மீனவர்களும் கடலில் பயணம் செய்வோரும் பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.