ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ள 702 இலங்கையர்கள்

ஐஎஸ் அமைப்பு 702 பேருக்கு தொர்பு? Today breaking news in Tamil

இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தபடும் ISIS அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாத ஒழிப்பு பிரினால் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய புலனாய்வு பிரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியை பரிசோதனை செய்த போது குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய அடிப்படையவாதியான சஹ்ரான் ஹசீமின் புகைப்படங்கள், குரல் பதிவுகள் மற்றும் காணொளிகள் குறித்த தொலைபேசியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *