இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு அறிவிப்பு

கர்ப்பிணி பெண்கள் 03வது டோஸ் போடலாம் - News in Tamil

கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தி 6 மாதங்களை கடந்த கர்ப்பிணி பெண்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் வீரியம் குறைவதனால் கர்ப்பிணி பெண் ஒருவர் தொற்றுக்கு உள்ளாகினால் அது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் கர்ப்பிணி பெண்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்திக் கொள்வது சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.