கிண்ணியா படகு விபத்தின் பின்னர் இன்று முதல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கிண்ணியா படகு விபத்தின் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை

கிண்ணியா படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து இன்று (24) முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவை ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண செயலாற்று முகாமையாளர் எம்.ஏ.உவைஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்கவின் பணிப்புரைக்கமைய குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றிச் செல்வதற்காக பேருந்து சேவை இன்று (24) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

இச்சேவை தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் இடம்பெறவுள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு (மிதப்பு பாலம்) கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து, இன்று (24) முதல் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்காமுனையில் இருந்து நடுத்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக கிண்ணியாவுக்கு பேருந்துச் சேவை இன்று காலை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியாவில் பெரும் ​சோகம்; இதுவரை 06 பேர் பலி

கிண்ணியா சம்பவம்; நாமல் ராஜபக்ஷ கூறியுள்ள விடயம்; சஜித் கடும் கண்டனம்

கிண்ணியாவில் பதற்ற நிலை; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு